தெலங்கானாவில் அடிபட்ட காயத்திற்கு தையலுக்கு பதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர், வீட்டருகே உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர் சிறுவனின் காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவி க்விக் போட்டு ஒட்டி அனுப்பியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.