
பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு நபர் தனது பைக்கிற்கு பெட்ரோல் எடுத்துக்கொண்டிருக்கும் போது சிகரெட் புகைப்பதை காணலாம். இதனால் கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அந்த நபரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பெட்ரோல் பங்குகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். புகை பிடித்தல் போன்ற செயல்கள் தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் அறிய வேண்டும்.
बड़े ही तेजस्वी लोग है 😂😂 pic.twitter.com/U9Fag46NqK
— Mikoo (@Mr_mikoo) August 12, 2024