
நம்முடைய பால்வெளி மண்டலத்தில் யூகிக்க முடியாத அளவுக்கு பல்வேறு விதமான ஆச்சரியங்கள் இருக்கிறது. தொடர்ந்து பூமி மற்றும் அதனை சுற்றியுள்ள கோள்கள் பால்வழி மண்டலம் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற நாசா விண்வெளி மையம் விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பூமியை ஒரு கோள் மிக வேகமாக நெருங்கி வருவதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் . அதாவது பூமியை மிக அதி வேகத்தில் சிறுகோள் ஒன்று நெருங்கி வருவதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது பூமியிலிருந்து சுமார் 2850000 மைல்கள் தொலைவில் ஒரு சிறிய கோள் உள்ளது.
இதன் பெயர் JV33 ஆகும். இந்த கோள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் நகர்ந்து பூமியை நோக்கி வருகிறது. இந்தக் கோள் நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் தற்போது பூமிக்கு அருகில் வர உள்ளது. மேலும் இதனால் இந்த கோளை தொடர்ந்து நாசா விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள்.