பொதுவாகவே பாம்புகள் என்றால் நிலத்தில் ஊர்ந்து செல்பவை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கால்கள் கொண்ட பாம்புகளும் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கிறது. இதற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளைப் பிடிப்பதற்காகத்தான். டைனோசர்கள் தற்போது இல்லை. இது பூமியில் ஒரு விண்கல் மோதியதால் அழிந்துவிட்டது. ஆனால் இந்த பாம்புகள் மட்டும் அப்படியே உள்ளன. இவை பூமியிலிருந்து இன்னும் அறியவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 200 மற்றும் 300 என பல்லின பாம்பு வகைகள் உள்ளது. உலகில் பாம்புகள் இல்லாவிட்டால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே பாம்பு இனங்கள் மரத்தில் வாழும், கடல் வாழ், விஷ பாம்புகள் மற்றும் மலைப்பாம்பு என பல பாம்புகள் அடங்கும். தற்போது இருக்கக்கூடிய பாம்புகளுக்கு கால்கள் இல்லை. பூமியில் அனைத்து இடங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன. இந்த உலகில் இருக்கும் பாம்பு இனங்கள் அழிந்தால் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். அப்படி எலிகளின் உற்பத்தி அதிகரித்தால் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். கழுகுகளின் எண்ணிக்கையும் குறையும்.

தவளைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். பூச்சிகளின் எண்ணிக்கை குறையும். உணவுக்காக பாம்புகளை சார்ந்திருக்கும் பன்றிகள், முங்கூஸ்கள் மற்றும் வேட்டையாடும் பறவைகள் போன்ற பல இனங்கள் அழிந்து விடும். நம்முடைய உயிர்காக்கக்கூடிய மருந்துகள் சில பாம்புகளில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இதில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களும் அடங்கும். உலகில் இருக்கும் பாம்பு எண்ணிக்கை குறைந்தால் அது பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.