தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக தவித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா பல சிகிச்சைகளுக்குப் பிறகு பழையபடி மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் சமந்தா சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்ததாக அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றார். தற்போது இந்தோனேசியா நாட்டில் தோழிகளுடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள அவர் சூரிய உதயத்தை வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து பூமியின் சொர்க்கம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
