சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விசித்திரமான தோற்றம் கொண்ட எறும்புண்ணி ஒன்று காய்ந்த மரத்திற்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான பூச்சிகளை நொடிப்பொழுதில் உண்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட மூக்கு மற்றும் நீண்ட நாக்கைக் கொண்ட இந்த விலங்கு, பூச்சிகளின் காலன் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்ட இந்த விலங்கின் அசாத்தியமான வேகம் மற்றும் அதன் விசித்திரமான தோற்றம் இணையவாசிகளிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராமில்
View this post on Instagram
“>பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 97 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. குதிரையைப் போன்ற முக அமைப்பைக் கொண்ட இந்த எறும்புண்ணி, நூடுல்ஸ் சாப்பிடுவது போல மிக எளிதாக பூச்சிகளை உறிஞ்சி உண்பதைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அரிதாகவே காடுகளில் காணப்படும் இத்தகைய விலங்குகளின் வியக்கத்தக்க உணவுப்பழக்கத்தை விளக்கும் இந்த வீடியோ, இயற்கையின் விந்தையை அனைவருக்கும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
