சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மக்கள் தங்கள் கழுத்தில் பெல்ட் போன்ற ஒரு கருவியைப் பூட்டி காற்றில் தொங்குவதைக் காண முடிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது ஏதோ தற்கொலை முயற்சியோ அல்லது ஆபத்தான விளையாட்டோ என்று அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உண்மையில் இது ஒரு வகையான மருத்துவ சிகிச்சை முறையாகும்.

மேலும் கழுத்து வலி, நரம்பு பிடிப்பு மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த முறையானது கழுத்து எலும்புகளுக்கு இடையே உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிக் கூடங்கள் அல்லது சிறப்பு சிகிச்சை மையங்களில் நிபுணர்களின் மேற்பார்வையில் இது செய்யப்படுகிறது.

“>

இந்நிலையில் பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாகத் தோன்றினாலும், சரியான முறையில் செய்யும் போது இது தசைப்பிடிப்புகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை வீட்டிலேயே செய்ய வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.