இந்திய அளவில் இப்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. வரலாற்று கதையில் சமந்தா நடித்து இருந்ததால், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். இருப்பினும் அப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.

அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதோடு சிட்டாடல் வெப் தொடரிலும் அவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமந்தா புல் தரையில் படுத்தபடி கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.