நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த புலியை அங்கிருந்து விரட்டியது. புலி தாக்கியதில் குட்டி யானைக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தாய் யானை கண்ணீருடன் குட்டி யானையை தும்பிக்கையால் வருடியது.

குட்டி யானையின் உடம்பில் எந்த ஒரு அசைவும் இல்லாததால் ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை அவ்வழியாக வாகனங்களை செல்ல விடாமல் மறித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கர்நாடக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த போது குட்டியானை இறந்தது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை காட்டுக்குள் விரட்டினர். அதன் பிறகு குட்டி யானையின் உடலை அங்கிருந்து அகற்றினர். மேலும் இதைத் தொடர்ந்தால் அவ்வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது.