சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் சில மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலையில் என்றும் இது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.