தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேப்போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய  2 மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் கூண்டை இறக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் ‌ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் உள்ள ஒன்றாம் எண் புயல் கொண்டு இறக்கப்பட்டுள்ளது.