தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களது பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச்சான்றிதழ்களை இழந்துள்ளனர்.

இவர்களுக்காக அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளத்தால் தங்களுடைய பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் போன்றவற்றை இழந்த மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி இன்று  முதல் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதே சமயம் மாணவர்களுக்காக கல்வி சான்றிதழ்கள் கட்டணம் இல்லாமல் வழங்குவதற்கு இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.