இன்னும் இரண்டு தினங்களில் 2024 ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில் புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கூறுகையில் பாலஸ்தீனத்தின் துயரத்தை மனதில் கொண்டு பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு ஒற்றுமையை காட்ட புத்தாண்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படும்.

இஸ்ரேல் 9000 குழந்தைகள் உட்பட 21,000 பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது. காசா மற்றும் மேற்கு கரையில் ஆயுதம் இன்றி இருக்கும் பாலஸ்தீனர்கள் இனப்படுகொலை பாகிஸ்தான் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முஸ்லிம் உலகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.