புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடி செலவில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆரியபாளையம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி செலவில் பாலம் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து அதன் பின் பூஜை செய்து அந்த பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதில் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, லட்சுமி நாராயணன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது, புதுச்சேரியில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்து நகரின் உட்புற சாலைகளை செப்பனிட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் லேப்டாப் விரைவாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.