மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ  வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ  விற்கவில்லை. இவரது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15000 மேற்பட்டவர்களிடம் செல் போனில் தொடர்புக்கொண்டு ஆர்டர்கள் எடுத்து சரியான நேரத்தில் டெலிவரி செய்து வருகிறார்.

இதனால் தினந்தோறும் 60 லிட்டர் பால் தேவைப்படுகிறது. இவருக்கு உதவியாக இவரது மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதைத்தொடர்ந்து இவர் தினமும் 3 கி.மீ சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்கிறார். இதனால் இவர் தினமும் 2000 காபி விற்கிறார்.

ஒரு கப் டீயை 5 ரூபாய்க்கு விற்கின்றார். இதன் மூலம் இவருக்கு தினமும் 7 முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதுதொடர்பான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.