
புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த புது நகரை சேர்ந்த 38 வயது பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதாள சாக்கடைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுநகர் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு வரும் 17ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது