இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு அனைத்து பிரிவுகளிலும், வழிகளிலும் நிதியுதவியும், நிதி சேவைகளையும் கிடைப்பதை முக்கியமான இலக்காக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் UPI கீழ் புதிய சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது RBI.

ஏற்கனவே உள்ள UPI, NEFT, RTGS சேவைகளைப் பயன்படுத்த இணைய மற்றும் IT வசதிகள் கட்டாயம். ஆனால், இயற்கைப் பேரிடர்கள், தகவல் தொடர்பு அமைப்பை பாதிக்கும் போர் விளைவுகளின் போது பயன்படுத்த Lightweight Payment and Settlement System (LPSS) (LD60 RBI கொண்டு வர இருக்கிறது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அப்டேட் செய்யும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.