டூத் பேஸ்ட் வாங்கிய வாடிக்கையாளரிடம் எம்ஆர்பியை விட அதிக பணம் வசூலித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க கேரளாவின் மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம்  மாஞ்சேரி அருகிழையை சேர்ந்தவர் நிர்மல். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, புகார்தாரர் மாஞ்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் டூத் பேஸ்ட் வாங்கியுள்ளார்.

அப்போது அவரிடமிருந்து 164 ரூபாய் MRP டூத் பேஸ்ட்டுக்கு 170 ரூபாய் வாங்கப்பட்டது. அதிகப்படியான தொகையை திருப்பித் தருமாறு கேட்டபோது, ​​பணம் தர இயலாது, வேறு எங்காவது வாங்கிக்கொள்ளும்படி கூறியதால் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.