2022-23 நிதியாண்டில் நாட்டின் வங்கி முறை மூலம் கண்டறியப்பட்ட போலி ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 14.6% அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.  20 போலி நோட்டுகள் 8.4%, 500 போலி நோட்டுகள் 14.4% அதிகரித்துள்ளது என்றும், 10, 100 மற்றும் 2000 மதிப்பிலான போலி கள்ள நோட்டுகள் 11.6% குறைந்துள்ளதாக எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதனால், 500 நோட்டுகளை வாங்கும் போது ஒரு முறைக்கு இரு முறை செக் பண்ண வேண்டும் என எச்சரித்துள்ள ஆர்பிஐ, இதே காலகட்டத்தில் கண்டறியப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை 28% குறைந்து 9,806 ஆக உள்ளது. வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த இந்திய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை (எஃப்ஐசிஎன்) முந்தைய நிதியாண்டில் 2,30,971 ஆக இருந்து 2022-23 நிதியாண்டில் 2,25,769 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.