இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை 3 கி.மீ. சாலையை மறு சீரமைத்தல், பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கு புதிய இல்லம், அலுவலகம், துணை ஜனாதிபதிக்கு புது இல்லம் போன்றவை கட்டுவதும் “சென்டிரல் விஸ்டா” மறுசீரமைப்பு திட்டத்தில் அடங்கும்.

இந்நிலையில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ஜனாதிபதி பெயர் இல்லை என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவிக்குமார் கூறியதாவது “இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தனக்கு வந்துள்ளது. அதில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவராக உள்ள ஜனாதிபதியின் பெயர் இல்லை. ஒரு நாட்டின் ஜனாதிபதியை இப்படியா அவமதிப்பது என கேள்வி எழுப்பி உள்ளார்.