டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சோலார் கொள்கையை அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் இதுவரை 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிய சோலார் சிஸ்டத்தால் கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்களுடைய வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்த அறிவுறுத்தப்படும். இந்த சோலார் கொள்கை மசோதாவுக்கு அமைச்சராவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் 3 வருடங்களுக்குள் அரசு கட்டிடங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.