இந்தியாவில் பல மாநிலங்களிலும் காலநிலை மாறுதல் ஆன கடுங்குளிர் மற்றும் கடும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி வடக்கு பகுதியை சேர்ந்த அயோத்தியில் அடுத்த ஆறு நாட்களுக்கு கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்களின் கல்வியிலும் தடை ஏற்படும் என அரசு கருதுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அயோத்தி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பள்ளி நேரம் காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி நேரம் மாற்றம் வருகின்ற பிப்ரவரி மூன்றாம் தேதி வரை கடைபிடிக்கப்படும் எனவும் மாணவர்களை கடும் குளிரிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.