சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற செயலிகள் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு புதிய அம்சங்களை தொடர்ந்து மக்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. சில காலத்துக்கு முன்னால் பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் குறைந்த செலவில் பைக் சவாரிக்கு முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். தற்போது இந்த வரிசையில் ஓலா நிறுவனம் நடப்பாண்டு தன்னுடைய எலக்ட்ரிக் பைக் சேவை அறிமுகம் செய்துள்ளது.

இதன் சோதனை ஓட்டமானது பெங்களூருவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் எலக்ட்ரிக் பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மிகவும் மலிவு  விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 10 கி மீ க்கு 50 ரூபாய், 15 கிலோ மீட்டருக்கு 75 என்ற அளவில் வசூல் செய்யப்படுகிறது. இது மிகவும் செலவு குறைந்ததாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.