இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. கிராமப்புற மக்கள் முதல் நகர மக்கள் வரை அனைவரும் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். அரசு மானிய விலையில் சிலிண்டர் வழங்கி வருவதால் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் புதிய சிலிண்டரில் கேஸ் முழுவதும் நிரம்பி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு புதிய சிலிண்டரில் ஈரத் துணியை எடுத்து சிலிண்டரில் நன்றாக துடைக்க வேண்டும். இப்படியே இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் துடைத்தால் சிலிண்டரில் ஈரமாக இருந்த சில இடங்கள் காயத் தொடங்கும். மீதமுள்ள பகுதி ஈரமாகவே இருக்கும். எந்த பகுதிகள் உணர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ அந்த இடத்தில் கேஸ் இருப்பதாக அர்த்தம். ஒருவேளை சிலிண்டரின் பாதி பகுதி ஈரமாகவும் மீதமுள்ள பாதை விரைவாக உலர்ந்து போனால் மோசடி நடந்துள்ளது என்று அர்த்தம். இதன் பிறகு கேஸ் ஏஜென்சி இடம் எங்கள் புகார் அளிக்கலாம்.