
ஹாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நிக்கி கேட். இவருக்கு 54 வயது ஆகும் நிலையில் தற்போது காலமானார். இதனை அவருடைய நண்பர்களும் வழக்கறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
கடந்த 1993-ம் ஆண்டு வெளியான டேஸ்ட் அண்டு கன்புஸ்டு மற்றும் பாஸ்டன் பப்ளிக் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபலமானார். அதன் பிறகு பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருடைய திடீர் மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.