கோவாவின் பரபரப்பான சாலையில் ஸ்கூட்டரில் ஆபத்தான சாகசம் செய்து பயணித்த இரு இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மஞ்சள் நிற டிசர்ட் அணிந்த ஒருவர் ஸ்கூட்டரில் நிமிர்ந்து நிற்கும்போது, அவரது பின்னால்மற்றொரு நபர் அமர்ந்திருப்பது அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.
வீடியோவில், அருகே வந்த மற்றொரு வாகன ஓட்டிகள் பலமுறை எச்சரித்தும், ஹெல்மெட் இன்றி ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டும் இளைஞர் வேகத்தை குறைக்காதது தெளிவாகக் காணப்படுகிறது. பரபரப்பான சாலையில் இந்த ஆபத்தான சாகசம், இருவரின் உயிரையும் அருகிலுள்ள பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளையும் அபாயத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
गोवा की सड़कों पर फुल स्पीड में बाइक स्टंट!
एक युवक जिम्मेदारी भूलकर तेज़ रफ़्तार में बाइक चलाते हुए दिखाई दे रहा है — वीडियो वायरल।#GoaNews #ViralVideo #DangerousRide #BikeRiders #GoaPolice #BandhuNews pic.twitter.com/mmOisAlYbW— ilyas khan (@ilyasilukhan) November 23, 2025
இந்த வீடியோ வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “வைரலாக வேண்டுமென்ற ஆசைக்கு உயிரை பணயம் வைக்க வேண்டிய அவசியமில்லை” என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க போலீசை நெட்டிசன்கள் கோருகின்றனர்.
கோவாவில் இளைஞர்கள் பொதுச்சாலைகளில் ஆபத்தான ஸ்டண்ட் செய்வது புதிதல்ல. பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் பதிவான நிலையில், போலீசார் தற்காலிக நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இருப்பினும், பாதுகாப்பு விதிகளை மீறுவோர் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சமீபத்திய வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்டண்ட் உள்ளிட்ட போக்குவரத்து மீறல்கள் கடுமையான குற்றமாகக் கருதப்படுவதால், பொது பாதுகாப்பு கருதி கடுமையான அமலாக்கம் அவசியம் என குடியிருப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
