மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் நஸ்மீன் சுல்தே. இவர் யூடிப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு youtube-ல் 10 லட்சம் ஃபாலோவர்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.‌

பிரபலங்கள் பலர் தாங்கள் போடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் வைரலாகும் வேண்டும் என நினைத்து பல வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இந்த நிலையில் நஸ்மீன் சுல்தே நவிமும்பை பகுதியில் ஒரு சொகுசு காரில் சென்று கொண்டிருந்த போது அந்த காரை அவரது காதலன் ஷேக் என்பவர் ஓட்டியுள்ளார்.

அப்போது நஸ்மீன் சுல்தே தான் சென்று கொண்டிருந்த காரின்‌மீது ஏறி நின்று பிரபலமான ஹிந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் பல கடுமையான விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இதேபோன்று சமீபத்தில் இந்தோனேஷியாவை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் படகில் நின்று நடனமாடிய வீடியோ போன்று இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.

மற்றொரு பக்கம் சமூக வலைத்தள பக்கத்தில் புகழுக்காக இதுபோன்று சாகசங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.