
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இன்று இரவு 21.35 மணிக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி அடுத்த காமக்யா நோக்கிச் செல்லும் 12506 நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்துள்ளதால் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடக்கின்றன. ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு: PNBE – 9771449971, DNR – 8905697493, ARA – 8306182542, COML CNL – 7759070004