இங்கிலாந்து மேற்கு பகுதியை சேர்ந்தவர் பாக்ஸ்சென்டேல். நடன கலைஞரான இவர் நியூயார்க்குக்கு சென்று இருந்தார். இந்நிலையில் பாக்ஸ்சென்டேல் வெண்ணிலா ஃப்ளோரன்டைம் எனப்படும் பிஸ்கட் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் பிஸ்கட் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பாக்ஸ்சென்டேலுக்கு வேர்க்கடலை அலர்ஜி என்பதும் அவர் சாப்பிட்ட பிஸ்கட்டில் வேர்க்கடலை சேர்ந்திருந்தது தெரியாமல் சாப்பிட்டதால் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.