சமீபத்தில் flipkart பேருந்து டிக்கெட் முன்பதிவு சேவையை புதிதாக தொடங்கியுள்ளது. இதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த டிக்கெட் முன்பதிவு சேவை தற்போது பெங்களூர், சண்டிகர், டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அகமதாபாத், ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் கிடைக்கின்றது. கட்டணம் ஏதும் இல்லாமல் பேருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.