கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா (17)என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அபிநயா கணித பாடத்தில் தோல்வியடைந்தார். அதில்  100க்கு வெறும்  26 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழ் பாடத்தில் 85 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 41 மதிப்பெண்களும், இயற்பியலில் 54 மதிப்பெண்களும், வேதியலில் 72 மதிப்பெண்களும், கணினி அறிவியல் பாடத்தில் 62 மதிப்பெண்களும் பெற்றிருந்தார்.

அவர் மொத்தம் 600-க்கு 360 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் அபிநயா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அபிநயா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் ஊ. மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பொது தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.