
இந்த நிலையில் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டிலேயே கணினி மூலம் தமிழ் வழியில் தேர்வு எழுதிய ஆனந்தன் என்ற மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பூந்தமல்லியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற ஆனந்துக்கு பூம்புகார் திமுக எம்எல்ஏ நிவேதா முருகன் 50,000 ரூபாய், சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினர். மாணவனின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.