தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பிளஸ் 1 வகுப்பை சேர்க்கையை உறுதி செய்வது அவசியமாகும்.

இதனைத் தொடர்ந்து துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடப் பிரிவில் சேர அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.