
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வந்த பிறப்பு, இறப்பு விவரங்கள் தற்போது மருத்துவமனை வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்று நகல்கள் தேவைப்படுவோர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம். என்ன காரணத்திற்காக கேட்கிறார்கள் என்பதை தெரிந்து வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.