துருக்கி சிரியா எல்லையை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியலும் மர்ம ஓலங்களும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளும் மட்டுமே காண முடிகின்றது. மலை போல் குவிந்து கிடக்கும் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்பதற்காக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். இந்த பணியில் இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் துருக்கியின் தெற்கு பகுதியான Samandag என்ற நகரில் இடுப்பாடுகளில் சிக்கி 90 மணி நேரம் கடந்த பின்பு பிறந்து பத்து நாட்களேயான பச்சிளம் குழந்தையும் அதன் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனுடன் மூன்று வயது சிறுவனும் கட்டிட ஈடுபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை... நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி | Baby Buried Quake Rubble Before Being Rescued
அது மட்டுமல்லாமல் 66 வயதான முதியவர் ஒருவரும் 90 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் மீட்பு குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.