உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியமும் ஜி7 நாடுகளும் இணைந்து ரஷ்யாவின் பெட்ரோலிய பொருட்கள் மீது உச்ச விலை வரம்பை நிர்ணயித்து அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதே போல் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது தடை விதித்து அமல்படுத்தியது.

இதன் காரணமாக ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது “ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலையேற்றத்தினால் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்பதாகும். மேலும் ஹங்கேரி அரசின் வெளியுறவு அமைச்சகம் இது குறித்து கூறியுள்ளதாவது “இந்த தடை ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மேலும் இந்த தடைகளுக்கு 97 சதவீதம் ஹங்கேரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என கூறியுள்ளது.