
கடந்த சில காலங்களாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மற்றொரு இந்திய மாணவரும் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் உப்பால் பகுதியை சேர்ந்தவர் ஆரியன் ரெட்டி.
இவர் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 13 அன்று ஆரியன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை ஆரியன் சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக அதிலிருந்து தோட்டா அவர் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு விரைந்து வந்த நண்பர்கள் ஆரியனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.