தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் மத்திய அமைச்சர்கள் பலரும் அடிக்கடி வருகை புரிகிறார்கள். அந்த வகையில் நேற்று ஜேபி நட்டா சென்னைக்கு வருகை புரிந்த நிலையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை புரிந்த நிலையில் பாஜகவின் மையக்குழு கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.

இந்நிலையில் சென்னையில் பயணத்தை முடித்த பிறகு நேற்றே அவர் டெல்லிக்கு கிளம்பிய நிலையில் முன்னதாக காரில் சாலை மார்க்கமாக ஜேபி நட்டா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. அந்த காரில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இருந்தார். இந்த விபத்தால் கார் புறப்பட தாமதமானதால் இறுதியாக சென்ற விமானத்தில் ஜேபி நட்டா டெல்லிக்கு சென்றார். மேலும் இந்த தகவல் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.