
கேரள மாநிலத்தில் அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு தொடர்பாக ஒரு குழந்தை வைத்த க்யூட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை உப்புமா வேண்டாம் அதற்கு பதிலாக பிரியாணி அல்லது சிக்கன் பிரை போடுங்கள் என்று கூறுகிறான். அந்தச் சிறுவனின் பெயர் ஷங்கு. இந்த குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்வதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கூறும் போது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காகவே அங்கன்வாடிகளில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்படுகிறது.
இந்த அரசாங்கத்தின் கீழ் அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுகிறது. அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த சிறுவனின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் வீட்டில் பிரியாணி சாப்பிடும் போது குழந்தை அப்பாவித்தனமாக வைத்த கோரிக்கையை அவருடைய தாய் பார்க்க அழகாக இருந்ததால் இன்ஸ்டாகிராமில் பதிவிட தற்போது அது அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.