தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டிருந்த 100 டன் எடையுள்ள கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்தை கேலி செய்யும் விதமாக, விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர் அந்த வரிசையில் தற்போது சாட்டை துரைமுருகன் அவர்களும் தனது எக்ஸ் வலைதளத்தில் மெர்சல் காட்சியை பதிவிட்டு தளபதி மட்டும் ஸ்பாட்டில் இருந்திருந்தால்… சங்கிலி கருப்பே என குறிப்பிட்டுள்ளார்.