
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அதிக அளவு செலவழித்து திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கொண்டாட்ட விழா நடுக்கடலில் நடைபெற்று வருகிறது. இது குறித்த உல்லாச கப்பல் இத்தாலியின் நகர துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் தன்னுடைய பயணத்தை முடிக்கும்.
இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் விருந்தினர்களை சிறப்பிக்கும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரபல பாடகி ஷகிரா இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளார். அதாவது இவர் தனது பிரபலமான வெற்றை பாடல்களை இந்த பயணக் கப்பலில் பாடிவரும் நிலையில் இவருடைய பாடலுக்கும் நடனத்திற்கும் சுமார் பத்து முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜாம் நகரில் நடந்த விழாவில் ரிஹானா 74 கோடி சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.