பாலிவுட் பிரபல நடிகை மாதுரி தீட்சித்தின் தாயார் சினேகலதா தீட்சித் (91) இன்று காலை காலமானார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை 3.40 மணிக்கு மும்பை வைகுண்ட தாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முன்னாடி நடிகர்கள் பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் கனவு கன்னியாக திகழ்ந்த மாதரி தீட்சித் சுமார் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.