தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் 2 படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நடிகர் விக்ரமுக்கு திருமணம் ஆகி துருவ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.