தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் கடந்த வாரம் புற்றுநோய் பாதிப்பால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் லேசா லேசா மற்றும் நான் அவளை சந்தித்தபோது ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 75 வயதான இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.