‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ யூடியூபர் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யூடியூபில் 2.5 கோடி சந்தாதாரர்களை கொண்ட இந்த சேனல், உலக முழுவதும் பிரபலமானது. ‘இன்னைக்கு ஒரு புடி’ என்ற இவர்களது வசனத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், குழுவின் சமையல் கலைஞரான பெரியதம்பிக்கு இன்று திடீரென இதய நோய் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.