
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஜான் லாண்டவ். இவருக்கு தற்போது 63 வயது ஆகிறது. இவர் உலக அளவில் வெளியாகி புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் .
இவர் சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென காலமானார். இவருடைய மறைவு ஹாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜான் லாண்டவ் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.