சன் டிவி தொடர்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் TRP-ல் டாப்பில் இருந்த ஒரு சீரியல் ரோஜா. இத்தொடர் வெற்றிகரமாக ஓடிவந்த நிலையில், கடந்த வருடம் தான் முடிவுக்கும் வந்தது. இதையடுத்து பிரியங்கா ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீதா ராமன் எனும் தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.

இதனிடையே தன் நீண்டநாள் காதலரை பிரியங்கா திடீரென மலேசியா கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சீதா ராமன் தொடரிலிருந்து தான் விலகுவதாக கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் பிரியங்கா. நல்ல கதாபாத்திரம் ஏன் நின்று விட்டீர்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.