கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்று  வசூலை அள்ளி குவித்தது. இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்க அஜித்தின் புது படம் தயாராக இருக்கிறது. ஆனந்தம் திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் டைரக்டராக அறிமுகமானவர் லிங்குசாமி. அஜித்தை வைத்து லிங்குசாமி ஜி எனும் திரைப்படத்தை டைரக்டு செய்தார். இது அவருக்கு முதல் அரசியல் திரைப்படமாக அமைந்தது. எனினும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் அஜித்துக்கு பதில் முதலில் சித்தார்த்தை தான் தேர்வு செய்திருந்தாராம் லிங்குசாமி. இருப்பினும் சித்தார்த் நடிக்க மறுத்து விட்டதால் அஜித்திடம் சென்றுள்ளார். ஜி படத்தில் அஜித் கல்லூரி மாணவன் போல் நடித்திருப்பார். கேரக்டர் பற்றி தெரிந்தவுடன் தனக்கு இப்படம் செட் ஆகாது என நினைத்து வேறு கதை இருக்கிறதா என கேட்டாராம் அஜித். காரணம் படப்பிடிப்பிற்கு முந்தைய நாளில்தான் கதை கேட்டாராம் அஜித். மேலும் இயக்குனரிடமே இப்படம் தனக்கு சரியாக வராது என ஓபனா கூறி விட்டாராம்.