பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினு இன்று காலமானார். 73 வயதாகும் இவர் வயிற்றுவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரும் இயக்குனர் சுரேஷ் இணைந்து ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.