பிரபலமான ஆபாசப் பட (Adult Film) நடிகை சோபியா லியோன் (26) அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை செய்த பின்பே தற்கொலை என்று உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வளர்ப்புத் தந்தையிடம் தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.